அறிவியல் பூர்வமான தகவல்..! இது மதிமுகம் கூகுள்..!
பயணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.., இரயில் பயணம்.., விமான பயணம்., சைக்கிளில் பயணம் என பல பயணங்கள் உண்டு…
அப்படி நானும் ஒருமுறை பேருந்தில் பயணிக்கும் போது என்னோடு பயணித்த சக பயணி ஒருவர்., ஒரு சிறப்பு பேருந்தை பற்றி சில பதிவுகளை பகிர்ந்தார்.. அந்த பேருந்தை பற்றி நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்…
1959ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – லண்டன் பஸ் சேவைகள் பற்றி தான் அதில் படிக்க போகிறோம்.. 4 ஊழியர்கள் 10 பயணிகளுடன் குறித்த ஒரு சேவையானது ஆரம்பிக்கப்பட்டது.
இதுகுறித்த பயணமானது 42 நாட்களில் 20,000 கிமி வரை பயணித்துள்ளது.. இது உலகின் இரண்டாவது நீண்ட பயணம் என்பது குறிப்பிடதக்கது…
இந்த பஸ்ஸில் ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் மட்டுமின்றி கட்டில் , பிரதேசங்களுக்கு ஏற்ப ஹீட்டர் , Ac உட்பட அனைத்து தேவையான வசதிகளும் இருந்துள்ளது.
அதுமட்டுமா பயணத்தின் நாம் சுட சுட சமைத்து சாப்பிட எதுவாக இருக்கும் வகையில்.. பயணம் முழுவதும் பஸ்ஸில் உணவு சமைக்கும் பாத்திரங்கள் இருந்துள்ளது.., அப்போது உணவுகளை தயாரித்து பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது .
இங்கிலாந்த் நாட்டில் உள்ள டோவர் துறைமுகத்தில் இருந்து இரவு புறப்படும் அந்த பேருந்து படகு சேவை மூலம் பிரான்சில் உள்ள டன்கிர்க் நகரத்திற்கு மறுநாள் வந்து சேரும்..
இப்படி பல்வேறு வசதிகளை கொண்ட அந்த perunthain அங்கிருந்து பாரிஸ் – இத்தாலி – துருக்கி – ஈரான் – ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் – இந்தியா ராமேஸ்வரம் வரை தரை வழியாக வந்து , ராமேஸ்வரத்திலிருந்து கப்பல் ஒன்றின் மூலம் ஏற்றப்பட்டு கொழும்புக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.. .
அன்றைய நாளில் அந்த பயணத்திற்காக ₹78 பவுண்ட்ஸ் அறிவிப்பட்டிருந்தது.. இன்று அதன் இந்திய மதிப்பில் 9,50,000 ரூபாய் என சொல்லலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..