அருந்ததியர் உள் ஒதுக்கீடு..! அமித்ஷா பேசுவது கேவலம்..! பாலகிருஷ்ணன் விமர்சனம்..!
செய்தி சுருக்கம் :
அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…
பாலகிருஷ்ணன் பேட்டி :
அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அப்போது பேசிய அவர், இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களில் நடத்தியது.
பட்டியலின மக்கள் சமுதயத்திலேயே மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ள சமூகம் அருந்ததியர் சமூகம்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு தமிழ்நாட்டின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அருந்ததிய மக்களுக்கு கிடைத்த வரலாற்று சாதனை.
அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கேரளாவில் வரலாறு காணாத சோகம் நடைபெற்றுள்ளது.
கேரளா அரசுக்கு நிதி :
எல்லா சக்திகளையும் திரட்டி வரலாறு காணாத சோகத்தில் இருந்து கேரளா அரசு மீண்டு கொண்டு வருகிறது. கேரளா அரசுக்கு நிதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.
நிலசரிவு மீட்பு பணிகளுக்கு தமிழக மீட்பு படையினரை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றி.
கேரளா நிலச்சரிவிற்கு முதற்கட்ட மீட்பு நிதியாக 10 லட்ச ரூபாய் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி உள்ளது.
பேரிடர் முன் எச்சரிக்கை அறிவித்தும் கேரளா அரசு செயல்படுத்தவில்லை என மத்திய அமைச்சர் கூறுவது ஒட்டுமொத்த பழியையும் கேரளா அரசு மீது சுமத்துவது போன்றது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவது கேவலம் :
இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவது கேவலமான நாகரிகம் மற்ற பேச்சாக இருக்கிறது,
கேரளாவிற்கு தற்போது வரை அவர்கள் நிதி ஒதுக்கவில்லை
எவ்வளவு மழை பெய்யும் என கண்டறியும் வானியல் தொழில்நுட்பத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
கேரளா அரசு மீது பழி சுமத்தும் மத்திய அரசு மீது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கேரளா நிலச்சரிவுக்கு அதிகமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசியல் செய்யக்கூடாது என தெரிவித்தார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..