அரசு பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் பொதுமக்கள்…
திருப்பத்தூர் மாவட்டம் பேரம்பட்டு பகுதியில் ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யாததாலும் ஊராட்சி மன்ற தலைவரின் அராஜக போக்கை கண்டித்தும் பொதுமக்கள் க்ல் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு பகுதியில் ஒரு மாத காலமாக சரிவர ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
மேலும் அதே பகுதியில் 1 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் போர்வெல் போடப்பட்டும் அதிலிருந்து தண்ணீர் விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவருடைய கணவர் முருகன் யாருக்கும் தண்ணீர் விட முடியாது எனக்கூறி பொதுமக்களிடம் அராஜகப் போக்கில் ஈடுபட்டுள்ளார்.
அதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து அரசு பேருந்து சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அறிந்து சென்ற காவல் துறையினர் பொதுமக்களிடம் பேசி உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.