மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மழையின் சேதாரத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்ததின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ள நிலையில் மழையினால் வீதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள பட்டமங்கலம் ஆராயத் தெரு, மேட்டுத்தெரு, அண்ணா வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகள் உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தண்ணீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தொடர் கனமழையின் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேளாண் இணை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு குழு உதவி கோரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post