மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆயிரத்து 8 சங்காபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது..
மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆயிரத்து 8 சங்காபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனுகீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவாரத்தை ஒட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, ஆலயத்தில் யாகம் வளர்க்கப்பட்டு மகாபூர்ணாகுதி செய்து தீபாராதனை காண்பிக்கபட்டது.
தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீரை ஆயிரத்து 8 சங்குகளில் நிரப்பப்பட்டு சிவன் மற்றும் அம்பாளுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.