ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே(52) மாரடைப்பு காரணமாக குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(மார்ச்.05) காலை காலமானார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், நம் இருவருக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகளும் சரி, மைதானத்திற்கு வெளியிலான நட்பும் சரி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியவை.
இந்தியாவில் உங்களுக்கு சிறப்பு இடம் எப்போதும் இருந்தது.
இந்திய ரசிகர்களின் மனதில் உங்களுக்கு தனி இடம் இருந்தது. ரொம்ப சீக்கிரம் போயிட்டீங்க என சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.