தொடைப்பகுதி கருமை போக்க அருமையான சில டிப்ஸ்…
* பச்சைப்பயிறு பொடி செய்து அதனுடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து கருமை உள்ள இடங்களில் தேய்த்து குளித்துவர கருமை முற்றிலுமாக நீங்கும்.
* கற்றாழையை கட் செய்து அதில் உள்ள ஜெல்லை நீரால் நன்கு ஒரு 5 முறை கழுவி விட்டு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அதனை அக்குள் மற்றும் தொடைகளில் இரவில் தேய்த்து வர கருமை குறைந்து வரும்.
* தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலந்து கருமை உள்ள இடங்களில் தடவி கழுவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
* உருளைகிழங்கை பொடியாக நறுக்கி அதை இரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அதை வடிகட்டி சாறு எடுத்து தொடைகளில் இரவில் கருமை உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அப்படி தொடர்ந்து பயன்படுத்தினால் 10 நாட்களில் கருமை நீங்கிவிடும்.