அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் மாகாணத்தில் ஓட்டுநர் இல்லாத ரோபோ டாக்ஸியை உபேர் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதை செயற்படுத்த ஹூண்டாய் மற்றும் அப்டிவ் நிறுவனங்கள் உடன் இணைந்து கூட்டு முயற்ச்சியில் இறங்கியுள்ளனர்.
லாஸ் வேகாஸில் டாக்ஸி சேவையை ஓட்டுனர்கள் இன்றி தானாக இயங்க கூடிய ரோபோ டாக்ஸி தொழிநுட்பத்தை கொண்டுவர உள்ளது. இது குறித்து நிறுவனம் கூறிய தகவலில், வாகனங்களை இயக்குவதற்கு ஆப்ரேட்டர்களை நியமித்துள்ளதாகவும் வரும் 2023 ம் ஆண்டு ஓட்டுனர்கள் இல்லாத டாக்ஸி களை அறிமுகப்படுத்தவுள்ளோம் என்றும் தெரிவித்தனர். மேலும் ரோபோ டாக்ஸிக்காக ஹூண்டாய் நிறுவனம் 5 எஸ்யூவி கார்களை பயப்படுத்திள்ளதாகவும் இது பாதுகாப்பாகவும் குறைந்த அளவே செலவு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
விபத்துக்காக ஏற்படாமல் தக்க 30 சென்சார்கள் மற்றும் கற் முழுவதும் காமெராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதகவும் இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்கள் ஒரே சார்ஜில் 315 மைல்கள் தூரம் ஓடுவதற்கும், 18 நிமிடத்தில் 80% சார்ஜ் ஆகும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு முதல் ரோபோ டாக்ஸியை மக்களின் சேவைக்கு பயன்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.