“சமய நல்லிணக்கம்” மிலாடி நபி கொண்டாட்டம் எம்.பி வைகோ வாழ்த்து..!!
நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவனை வணங்கி மகிழ்வோம், பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம், எளிய மக்களுக்கு உதவி செய்து வாழ்வோம் என சமூக ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் நபிகள் பெருமானார் வற்புறுத்தி அறிவுறுத்தியதை வைகோ நினைவுகூர்ந்துள்ளார்
மதுவை ஒழித்திடவும், மதுவிலக்கைக் கட்டாயமாக்கிடவும், அறியாமை இருளைப் போக்கிடவும், சமரசமின்றி உறுதியுடன் வாழ்ந்திடவும் வலியுறுத்தி அரபிகளின் வாழ்க்கையில் மகத்தான மறுமலர்ச்சி கண்ட மாமனிதர்தான் நம் நபிகள் நாயகம் என்று வைகோ தெரிவித்துள்ளார்..
உலகெங்கும் வாழும் இஸ்லாமியச் சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளான மீலாது நாளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்துகளைக் கனிவுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..