மறுக்கப்பட்ட பம்பர சின்னம்..!! துரைவைகோ திட்டவட்டம்.!! தேர்தல் ஆணையம் பதில்..?
மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி அட்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
திருச்சியில் துரைவைகோ பேட்டி :
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ, “தேர்தல் ஆணையம் தான் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என சொன்னார்கள். ஆனால், இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே, மதிமுகவின் சின்னம் பம்பரம் என்பதால் அதனை லாக் செய்து வைத்துள்ளார்கள்.
ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டம் இருந்தாலுமே, தற்போது இது ஒரு முன் உதாரணமாக மாறிவிடக் கூடாது எனவே பம்பரம் சின்னத்தை மதிமுகவிற்கு வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. தேர்தல் விதிமுறைகளின் படி, ஒருசின்னம் பல வருடங்களாக ஒரு கட்சி நடத்தி வந்தால், அந்த சின்னத்தை அவர்களுக்கே தர வேண்டும் என சட்டத்தில் உள்ளது. இதுகுறித்து எங்கள் தரப்பு வழக்கறிஞ்சர் வாதாடியுள்ளார்.
தற்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டாலும் அதாவது, வேட்பாளரின் சின்னம் எது அது யாருடையது என்று பார்த்து வாக்களிக்கும் அளவிற்கு.., மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். தற்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. எனவே 24 மணி நேரத்திற்குள் எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.
எனவே இந்திய கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவையும், அதன் சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு மக்கள் நிச்சயமாக வாக்கு அளிப்பார்கள் என நம்புகிறோம்.
ஒரு நல்லது நடக்கப்போகிறது என்றால், கால தாமதம் ஆகத்தான் செய்யும். நாங்கள் அதை பற்றி கவலைப்படவில்லை. தேர்தல் ஆணையம் புதிது புதிதாகக் காரணங்களைச் சொல்லி எங்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் மெத்தனம் காட்டி வருகின்றது. மதிமுக மட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இதே நிலைதான். பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்களுக்கே இந்த நிலைமை என்றால்.., மக்களின் நிலை என்ன..? எனவே வாக்களிக்கும் பொழுது மக்கள் பார்த்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக போட்டியிடவாதல் பம்பரம் சின்னம் ஒதுக்கமுடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வைகோ பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி இல்லாத ஒரே காரணத்தால் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க மறுக்கிறார்கள். என வேதனை தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..