சென்னையில் முக்கிய 5 இடங்களில் என்ஐஏ ரெய்டு..!!
கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (National Investigation Agency) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் பின்னணியில்
அந்த மர்ம நபர்கள் எங்கெல்லாம் சென்றார்கள், யாரை சந்தித்து பேசினார்கள் யார் சொல்லி குண்டு வைத்தார்கள் என பல்வேறு கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விவரங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினார்கள்.. இந்நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை நடத்தினர்.
தமிழ்நாட்டில், 5 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள். சென்னையில் மூன்று இடங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் இந்த சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த சோதனையின் இறுதியில் பெங்களூரைச் சேர்ந்த சிறையில் இருக்கும் குற்றவாளி மெகபூப் பாஷா, பீகார் சிறையில் இருக்கும் குற்றவாளி காஜா மொய்தீன் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் காவல்துறை கண்காணிப்பில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் ஒருவரும், முத்தியால்பேட்டை விநாயகர் கோயில் தெருவில் ஒருவரும், திருவல்லிக்கேணியில் இரு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இன்று சென்னை மண்ணடி, முத்தையால் பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..