பாமக நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் அன்புமணி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லை.
எனது சக்தியை மீறி 35 வயதில் அன்புமணியை மத்திய மந்திரி ஆக்கியது எனது முதல் தவறு. அவருக்கு தலைமை பண்பு இல்லை. நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது பெரிய தவறு. வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்துள்ளது.
அன்று மேடையில் மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு இருந்தது சரியா… மைக்கை தலை மேல் தூக்கி போடுவது போல் போட்டது சரியா? புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார்? தாயை அடிக்க முயன்றவர். தனது தாயை பாட்டில் எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. தனது குருவை அவமதித்தவர்.சோறு தண்ணீரின்றி கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தேன்.
தகப்பனிடம் தோற்பது என்பது மானக்கேடு இல்லை. எப்படி இருந்தாலும் கட்சி உங்களிடம் தான் வரும். அன்புமணி தான் தவறான ஆட்டத்தைத் தொடங்கினார். கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார்.’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.