தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ். ‘கன்னிப் பருவத்திலே’ படத்தி்ல கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ்.
ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்கியராஜூடன் போட்டி போட்டு நடித்து அசத்தினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியுசி, பச்சையப்பாஸ் கல்லூரிகளில் படித்தவர். பின்னர் 1972 முதல் 1979 வரை டிரிப்ளிகேனில் உள்ள கெல்லட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் இன்று (மே 29 )காலை உயிரிழந்தார். இன்று காலை 8.15 மணியளவில் அவருடைய வீட்டில் இருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, அவர் இறந்து போனார்.
நடிகர் ராஜேசின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.