மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்க..!
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் சம அளவில் சீரகம்,வெந்தயம் மற்றும் சோம்பை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டலில் போட்டு காற்று புகாதபடி வைக்க வேண்டும்.
காலை எழுந்ததும் ஒரு டம்ளர் சூடான நீரில் ஒரு ஸ்பூன் இந்த பவுடரை கலந்து வெறும் வயிற்றில் வெது வெதுப்பாக குடித்து வர வேண்டும்.
அனைவருமே இதனை குடித்து வரலாம்.உடல் சூடு,நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறுகள், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை கூட இது சரிசெய்கிறது.