அடுத்த முறை இத ட்ரை பண்ணி பாருங்க..!
கோதுமை மாவை வெறும் வாணலில் வறுத்து உப்பு சேர்த்து ஆறியதும் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் சுவையாக இருக்கும்.
குழம்பு வைக்கும்போது முதலில் வெங்காயம், காய்கறிகள் வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கி குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும்.
ரவா தோசை செய்யும்போது அதில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து தோசை சுட்டால் தோசை நன்றாக சுவையாகவும் நிறம் கூடுதலாகவும் இருக்கும்.
காய்ந்து போன பிரட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து சிறிது வேகவைத்து எடுத்தால் மென்மையாக இருக்கும்.
தவறுதலாக எண்ணெய் கீழே ஊற்றினால் அதில் சிறிது கோதுமை மாவினை தூவி துடைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
வடகம், அப்பளம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து பின் எண்ணெயில் பொரிக்கும்போது நிறைய எண்ணெய் குடிக்காது.
முறுக்கு மாவு பிசையும்போது அதில் உருகிய ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பிசைந்து முறுக்கு சுட்டால் ருசியாக இருக்கும்.
முருங்கைக்கீரை, அகத்திக்கீரை ஆகியவற்றை வதக்கும்போது அதனை கரண்டியின் நுனிப்பகுதியை கொண்டு வதக்கினால் கட்டிகள் விழாது.
இட்லி மாவு புளித்துவிட்டால் அதில் இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பின் மேலே வரும் நீரை வடிக்கட்டு எடுத்துவிட்டால் புளிப்பு தன்மை குறைந்துவிடும்.
வெங்காய பகோடா செய்யும்போது அதில் கறிவேப்பிலை மற்றும் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பிசைந்து பகோடா சுட்டால் சுவையாக இருக்கும்.
