மிக்ஸ்டு தால் அடை இன்னிக்கு நைட் செய்ங்க..!
தேவையானவை:
துவரம் பருப்பு
கடலைப் பருப்பு
பாசிப்பருப்பு
பச்சரிசி – தலா 50 கிராம்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – 3 துண்டு.
செய்முறை:
துவரம் பருப்பு,பாசிப்பருப்பு,கடலை பருப்பு,பச்சரிசி ஆகியவற்றை சுத்தம் செய்து ஊறவைக்க வேண்டும்.
ஊறிய பின் அதில் சீரகம்,பச்சை மிளகாய்,இஞ்சி,உப்பு போட்டு அடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் நறுகிய சின்ன வெங்காயம்,நறுக்கிய தேங்காய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் அடை வார்த்து சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் மிக்ஸ்டு தால் அடை தயார்.