ராகி கொழுக்கட்டை.. டுடே ஸ்நாக்..!
தேவையான பொருட்கள்:
வெல்லம் – 1 கப்
தண்ணீர் – 1/4 கப்
ராகி மாவு – 1 கப்
பொடித்த அவல் – 1/2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
பொடித்த வேர்க்கடலை – 1/2 கப்
கரைத்த வெல்லம்
நெய்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் கால் கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.வெல்லம் கரைந்ததும் அதனை இறக்கி விட வேண்டும்.
ஒரு வாணலில் ராகி மாவை வறுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் பொடித்த அவல்,தேங்காய்த்துருவல்,பொடித்த வேர்க்கடலை சேர்த்து கொள்ளவும்.
பின் இதில் வெல்லம் கலவையை வடிகட்டி சேர்த்து கொள்ள வேண்டும்.
இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் மாவில் கொழுக்கட்டை பிடித்து வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் நெய் தடவி கொழுக்கட்டை வைத்து 15 நிமிடம் வேகவைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.