புரட்டாசி முதல் சனி என்றாலே இந்த திருத்தலத்தில் திருவிழா தான்..!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தென் திருப்பதி எனப்படும் திருமலைவையாவூரில் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள திருமலை வையாவூர் மலைக்குன்றில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது.
திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் முழுதும் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட்டு வருகின்றனர்.
இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலை முழுவதிலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா கோவிந்தா என திருநாமம் உச்சரித்து வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..