“தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தை இரண்டாகப் பிரிக்க முயற்சிப்பதாக மாமன்ற கூட்டத்தை சென்னை பேராயத்தின் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயர்கள் புறக்கணிப்பு”
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெயின் பள்ளியில், CSI சென்னை பேராயத்தின் சிறப்பு மாமன்ற கூடுகை சினாட் விதிகளையும் நீதிமன்ற உத்தரவையும் மீறி அவசரமாக கூட்டப்பட்டுள்ளதாக கூறி பேராயத்தின் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயர்கள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் ஓய்வு பெற இருப்பதற்குள் பேராயத்தில் அவர் செய்த ஊழலை மறைப்பதற்காக பேராயத்தை இரண்டாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை பேராயத்தின் மாமன்ற உறுப்பினர் தாமஸ்,
சென்னை பேராயத்தினால் எம் டி சி பெருமக்கள் மற்றும் ஆயர்களை கூட்டிய மாமன்ற கூட்டம் எந்த காரணத்தினால் கூட்டப்பட்டது என்பதை அறிந்து புறக்கணித்தோம். தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தை இரண்டாக பிரிக்க இந்த கூட்டம் முடிவெடுக்க போகிறது என்பதை அறிந்து இன்று கூட்டத்தை புறக்கணித்திருக்கிறோம்.

பேராயம் செய்த தவறுகளை எப்படி தட்டிக் கேட்கப் போகிறார்கள் என்று முன்னெச்சரிக்கையாக பேராயர் ( ஜார்ஜ் ஸ்டீபன்) கணக்கு வழக்குகளை குழப்புவதற்காக பேராயர் ஓய்வு பெற போகிற ஓரிரு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கூட்டத்தை கூட்டி பேராயத்தை இரண்டாகப் பிரிக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளார்.
திருச்சபையில் கேமராக்கள் குண்டர்கள் போடப்பட்டு ஆயர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு குண்டர் ஒருவர் ஒரு ஆயரின் தாக்கி இருப்பதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உறுப்பினர்கள் என்ற வகையில் இந்த சம்பவத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பேட்டி : தாமஸ், மாமன்ற உறுப்பினர், சென்னை பேராயம்
Discussion about this post