புரட்டாசியில் அசைவம் இல்லை.. சைவம் மட்டுமே.. ஏன் தெரியுமா..?
தமிழ் மாதங்களில் ஆறாவதாக வரும் புரட்டாசி மாதமானது மழையும் வெயிலும் கலந்த ஒரு மாதமாகும். இந்த மாத வெப்பமானது கோடைக்கால வெப்பத்தைக் காட்டிலும் மிகவும் கெடுதம் தரக்கூடியது. எனவேதான் நம் முன்னோர்கள் இந்த மாதங்களில் அசைவத்தை ஒதுக்கி சைவத்தை சாப்பிட்டு இருக்கிறார்கள்.
புரட்டாசி மாதம் என்பது பொதுவாக பெருமாள் மாதமாகும். இந்த மாதங்களில் பலரும் பெருமாள் கோவிலில் நெற்றியில் நாமத்தோடு சுற்றுவார்கள், காய்கறி கடைகள் முழுக்க கூட்ட நெரிசலில் மக்கள் கூட்டம் கூடியும், தெருக்களில் கோழிகள் மற்றும் ஆடுகள் சுதந்திரமாகவும் சுற்றி திரியும்.
புரட்டாசி மாதமானது புதன் அதாவது மகாவிஷ்ணுவின் வீடாகும். எனவே இது பெருமாளின் மாதமாகும். பெருமாளானவர் சைவ உணவிற்கு உரியவர், எனவே இந்த மாதங்களில் அசைவத்தை தவிர்த்து பெருமாளை வணங்கி துளசி நீரை குடித்து வர பெருமாளின் அணுகிரகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் பகவானுக்கு உகந்தது உப்பு சப்பு இல்லாத உணவாகும் எனவே அசைவ உணவினை தவிர்தே ஆக வேண்டும். பச்சை காய்கறிகள், கனிகள் ஆகியவற்றால் செய்யப்படும் உணவுதான் பெருமாளுக்கு உகந்தது. இம்மாதத்தில் உடலில் இருந்து அதிகபடியான வெப்பம் வெளியேறும் என்பதால் அப்போது நாம் அசைவ உணவை சாப்பிடும்போது அது வயிற்றில் அஜீரணக் கோளாறுகளை உண்டாக்கி வயிற்று உபாதைகளை உண்டாகும் அதனால் அசைவத்தை தவிர்த்து சைவத்தை உண்டு பெருமாளின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.