மதுபிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!! 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் திட்டம்..!! குஷியில் மதுபிரியர்கள்..!!
ஆந்திராவில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 99 ரூபாய் முதல் மதுபானங்கள் விற்பனை செய்யவுள்ளதாக ஆந்திரா அரசு தெரிவித்துள்ளது..
ஆந்திரா மாநிலத்தில் வருகின்ற 1ம் தேதி மதுவை 99 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.. அந்த மதுவின் அளவானது 180மிலி விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.. அதற்கான டெண்டரை பிரபல தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.. மேலும் இந்த 99 ரூபாய் மதுபாட்டிலை ஆந்திராவில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது..
அதற்காக புதிய மதுபானக் கொள்கை ஒன்றை ஆந்திரா அரசு வெளியிட்டுள்ளது. ஆந்திராவின் 12 நகரங்களில் ப்ரீமியம் கடைகள் திறக்கப்படவுள்ளது. அதில் விலை குறைவான மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
அதற்கான ஓப்புதல்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த புதன்கிழமை அன்று
அமராவதியில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய மதுக் கொள்கைகான ஒப்புதல்களை வழங்கினார்..
இந்த புதிய மது கொள்கையில், அனைத்து வகையான மதுபானங்களையும் விற்பனை செய்யவுள்ளது., மேலும் அதற்கான விலையையும் மாநில அரசு குறைத்துள்ளது. அதற்கான புதிய விதிகளை தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளது.., இந்த புதிய கொள்கையின் மூலம் ஆந்திராவில் எந்த வகை மதுபானத்தையும் வெறும் 99 ரூபாய்க்கே பெற்றுக்கொள்ளலாம்., இந்த புதிய மது கொள்கையானது அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஆந்திர அரசின் இந்த புதிய கொள்கை அமலுக்கு வந்த பிறகு,மதுபிரியர்கள் 180மிலி அளவு கொண்ட மதுபானங்களை வெறும் 99 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் அதுவும் அனைத்து பிராண்டு மதுவின் விலை 99 ரூபாயில் இருந்தே விற்பனை செய்யப்படவுள்ளது..
ஆந்திராவில் உள்ள மதுபானகடைகளுக்கு லாட்டரி மூலம் 2 ஆண்டுகளுக்கு மதுவை விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது., அதே சமயம் மது கடைகள் திறக்கும் நேரத்தையும் ஆந்திரா அரசு அதிகரித்துள்ளது ..
அதாவது அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் ஆந்திராவில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது… இந்த புதிய கொள்கைக்கான உரிமத்தை பெற்றுக்கொள்ள 2 லட்சம் ரூபாய் விண்ணப்ப பணமாக கொடுத்திட வேண்டும்..,
மேலும் 50 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை புதிய மதுபானகடைகளை திறப்பதற்கான உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மதுக்கட்டிடம் ஆனது நான்கு அடுக்கு மாடிகளாக கட்டப்படும்., ஆந்திராவில் புதியதாக 15 பிரீமியம் மதுபானக் கடைகள் நான்கு அடுக்கு மாடிகள் கொண்டு திறக்கப்படும்..
அதற்கான உரிமத்தை விரைவில் வழங்கப்படும் எனவும்., இந்த உரிமமானது 5 ஆண்டுகள் வரை செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.. இந்த புதிய கொள்கையின் மூலம் மதுக்கடை உரிமையாளர்கள் தங்கள் விற்பனையில் 20 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது..
புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தின் வருவாய் சுமார் 2 ஆயிரம் கோடி அதிகரிக்கும்., எனவே தான் இந்த திட்டத்தை ஆந்திரா அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது., மேலும் மதுவின் விலை குறைக்கப்படுவதால் மதுபிரியர்கள் கள்ளச்சாராம் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை., இதனால் மது கடத்தல் கூட முற்றிலுமாக ஒழிக்கப்படும் என தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..