தம்பதிகளுக்கு இடையே அன்பு குறையுதா..? அப்போ இதான்..!!
திருமணம் ஆகிய தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் நல்லா சந்தோசமாக இருப்பார்கள் ஆனால் சில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு இடையே அன்பு குறைந்து விரிசல் ஏற்பட ஆரம்பிக்கிறது. அதற்கு பலவகை காரணங்கள் இருக்கலாம் அவற்றை பற்றி பார்போம்.
எதிர்பார்ப்பு:
தன் துணையிடம் எதிர்ப்புகள் வைத்திருப்பது இயல்பு தான் ஆனால் அந்த எதிர்பார்புகள் அதிகமானால் சமையத்தில் அது நடக்காதபோது கோபம், ஏமாற்றம் உண்டாகும். இதுவே காலபோக்கில் அன்பு குறைய காரணமாகும்.
தொடர்பு இழப்பு:
ஆரம்ப காலங்களில் தம்பிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி நல்ல தொடர்பில் இருப்பார்கள் ஆனால் சில காலங்களில் வேலை, குழந்தை என பல காரணங்களால் இருவரும் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்கிக் கொள்ள முடியாது. இதுவே அன்பு குறையவும் தொடர்பாகும்.
பாலியல் பிரச்சனைகள்:
திருமண வாழ்வில் பாலியல் என்பது முக்கியமானதாகும். இதில் உண்டாகும் பிரச்சனைகள் உறவிலே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காலப்போக்கில் அன்பு குறையும்.
நம்பிக்கை இழப்பு:
நம்பிக்கை என்பது உறவுகளுக்கு இடையே மிகவும் முக்கியமானதாகும். அப்படி நம்பும் ஒருவர் ஏமாற்றினால் அதில் பெரிய தாக்கமானது ஏற்படும். இதுவே நாளடைவில் அன்பு குறையவும் செய்யும்.
தனிப்பட்ட வளர்ச்சி:
தம்பதிகளுக்கு இடையே தனிப்பட்ட வளர்ச்சி இல்லாவிட்டாலும் அந்த உறவு பிரிய ஆரம்பிக்கும். இதனால் அன்பு குறையலாம்.
வெளிப்புற காரணிகள்:
நண்பர்கள், குடும்பத்தினர், சமூகம் ஆகியவற்றால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் உண்டாகலாம். இதுபோல வெளிப்புற காரணிகளால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் உண்டாகி அன்பு குறையும்.
மேலே குறிப்பிட்டது போல தம்பதிகளுக்கு இடையே அன்பு குறைய பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்கி கலந்து பேசி எந்தவொரு பிரச்சனைகளையும் உடனே முடித்து விட வேண்டும்.