சுப நிகழ்ச்சிகளில் இதற்கு தடை..!! மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?
இனி சுப நிகழ்ச்சிகளில் மது விருந்து கிடையாது.. மீறினால்..
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மது விருந்து இல்லாமல் திருமண விழா நடத்தும் குடும்பங்களை கௌரவிக்க கிராம பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இமாச்சலின் ஹமிர்பூர் மாவட்டத்தில் லம்ப்லு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்தை சேர்ந்த தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் புகையிலை மற்றும் பிற போதை பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
தங்கள் கிராமத்தில் இவற்றை முற்றிலுமாக ஒழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இதன் காரணமாக கிராமத்தில் புகையிலை பயன்படுத்துவோர் மற்றும் மது அருந்துவோர் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. அதில் கிராமத்தில் மது விருந்து இல்லாமல் திருமண ஏற்பாடு செய்யும் குடும்பங்களை கௌரவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கிராம பஞ்சாயத்திற்குள் வரும் வீடு அல்லது கடைகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் பஞ்சாயத்துக்கு 20% வரி கட்ட வேண்டும் மற்றும் வாடகை தாரர்கள் மதி மற்றும் பிற போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..