டெல்லி பிரதமர் அலுவகத்தில் ‘ரோஸ்கர் மேளா’ என்ற 10 லட்சத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். காணொளி வாயிலாக மோடி இந்தத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
முதற்கட்டமாக பல்வேறு துறைகளை சார்ந்த பணிகளுக்கு 75000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையங்களை வழங்கி உரையாற்ற உள்ளார். இத்திட்டத்தின் மூலம் தேர்வாகும் நபர்கள் அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளின் பணிகளில் சேருவார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது . ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. மற்றும் ரெயில்வே துறைகளில் ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி பணியிடங்கள் நிரப்படுபவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.