தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ ஆணைய அறிக்கை குறித்தான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீதும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார், மேலும் விசாரணை முழுவதும் முடிந்தவுடன் மக்களுக்கு நியாயம் கிடைக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மேலும்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி,
விசாரணையின் இறுதியில் முதல்வர் தகுந்த முடிவை எடுப்பார் என்று கூறினார். இதன் மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவதில் பழனிசாமியின் பெயர் அடிப்பட்டு வரும் நிலையில் அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.