ஜெகன்மோகன் ரெட்டி விவகாரத்தில் சிக்கிய முக்கிய நபர்..!! பரபரப்பான ஆந்திரா..!!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது., அதற்காக தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது..,
அதனை தொடர்ந்து அடுத்த மே 13ம் தேதி ஆந்திராவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை தற்போதை ஆந்திரா முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான “ஜெகன் மோகன் ரெட்டி” நேற்றைய முன் தினம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆந்திராவில் வரும் மே 13 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலையொட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெகன்மோகன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், என்டிஆர் மாவட்டம் விஜயவாடா சிங் நகரில் யாத்திரை சென்றபோது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியுள்ளனர்.
இதில் முதல்வர் ஜெகன்மோகன் படுகாயம் ஏற்பட்ட நிலையில், ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார். ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர காவல்துறை அறிவித்தது.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜயவாடா அருகே உள்ள சிங் நகர் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான சதீஷ் குமார் மற்றும் ஆகாஷ், துர்கா ராவ், சின்னா, சந்தோஷ் ஆகியோரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆந்திராவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..