இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,sssசி.எஸ்.கே வின் தற்போதுகேப்டனாகவும் இருக்கும் நட்சத்திர வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்க்ஷி தோனி இருவரும் சேர்ந்து தற்பொழுது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
கிரிக்கெட் உலகத்தில் தன்னிகரற்ற வீரராகவும், பெருமளவு ரசிகர்களை கொண்ட வீரராகவும் இருந்து வரும் தல தோனி தற்போது படங்களை தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டும் சி.எஸ்.கே.அணியின் கேப்டனாக தோனி விளையாடுவர் என்று கூறப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து தோனி படத்தயாரிப்பில் இறங்கவுள்ளார் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
தோனி இயக்கும் முதல் படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குவதாகவும் தெரிகிறது. மேலும் தொழிநுட்ப கலைஞர்கள் மற்றும் மற்ற நடிகர்களை பற்றய தகவல் விரைவில் வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது.