சுவை மிகுந்த ரவை, தேங்காய் தோசை..! காலை உணவு..!
- ரவை – 1 கப்
- துருவிய தேங்காய் – 3/4 கப்
- சின்ன வெங்காயம் – 5
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – 1 கப்
- துருவிய கேரட் – சிறிது
- எண்ணெய் – தேவையான அளவு
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் அதில் ரவை, தேங்காய், சின்ன வெங்காயம், உப்பு, சீரகம் சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
அந்த கலவையை அப்படியே 15 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும். பின் வழக்கமாக தோசை ஊத்துவது போல தோசை ஊற்றி மேலே துருவிய வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கலாம்.
இந்த தோசையுடன் கார சட்னி, குருமா, சாம்பார் ஆகியவை சாப்பிட சுவையாக இருக்கும்.
