கணபதியே போற்றி – விநாயகர் வழிபாடு..!!
மூத்த கடவுள் விநாயகரை வணங்கி விட்டு செய்யும் எந்த செயலும் வெற்றியில் தான் முடியும். கோயில்களில் மட்டுமல்ல பலரின் இல்லங்களுக்கு வெளியே இவருக்கு என்று கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
விநாயகரை வணங்க அனைவருக்கு தெரியும். ஆனால் அவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
விநாயகருக்கு எளிமையாக கிடைக்கும் அருகம்புல் வைத்தே வழிபாடு செய்யலாம். அருகம்புல்லை மாலையாக கோர்த்து அவருக்கு வழிபாடு செய்து வந்தால் பிணிகள் நீங்கும்.
விநாயகருக்கு கொழுக்கட்டை, கரும்பு, பழங்கள், பருப்பு, பொறி, அவள், எள், இளநீர், தேன், பயிறு, அப்பம், வெள்ளரி பழம் , கிழங்கு, கொண்ட கடலை, மூக்கடலை, மற்றும் அன்னம் இவை என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த வகையான உணவுகளை படைத்தது, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் சதுர்த்தி அன்று விரதம் இருந்தால், வீட்டில் செல்வம் செழிக்கும், கடன் நீங்கும், நன்மை பெருகும்.
அல்லது வாரத்தில் இரு முறை விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிந்து மாலை 6:00 மணிக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். 108 கணபதி மந்திரம் சொல்லி வழிபடுவது இன்னும் பலன் தரும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post