சிவாகாசியில் வேட்டு சத்தம் முழங்க தொடங்கிய பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா..!!
மே 2ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். திருவிழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் இரவு அம்மன் குதிரை வாகனம், சிம்ம வாகனம் மற்றும் பூ அலங்காரத்தில் வீதி உலா வந்து மக்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த சுற்று வட்டார கிராமத்தில் உள்ள பல்வேறு பக்தர்கள் வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷகமும் சிறப்பு தீப ஆராதனையும் நடைபெற்றது.
இன்று காலை கயர் குத்து திருவிழாவும், நாளை மாலை தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. மே 12ம் தேதி திருவிழாவும் நிறைவு பெரும்.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post