உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த 2-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.
206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இன்று நிறைவடைகிறது. இதன், அரையிறுதியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். முதல் 2 ஆட்டங்களும் சமனில் முடிவடைந்து, ‘டை பிரேக்கர்’ ஆட்டம் நடத்தப்பட்டது.
இதில் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பின், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பெற்றார். இன்று நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை அவர் எதிர்கொள்ள உள்ளார்.
Discussion about this post