சக்தி வாய்ந்த மஹாலக்ஷ்மி திலகம்..! தீய சக்திகளை விரட்ட..!! தொட்டது வெற்றி..!!
நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது.., நம்மை சுற்றி உள்ளவர்கள் மட்டுமே..
அதிலும் ஒரு சிலருக்கு தீய சக்திகளின் அச்சுருத்தல் இருக்கும்..,
கடன் தொல்லைகள் அதிகரிப்பு, வீட்டில் அடிக்கடி சண்டை.. போன்றவை தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா..? அதை சரி செய்யவும்..
உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் தீரவும் இந்த ஒரே ஒரு நற்செயலை செய்தாலே போதும்.
ஆன்மீக படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.. அதன்படி நாம் அந்த தெய்வத்தை முறையாக வணங்கி வழிபட்டால் நமக்கு சிறந்த பலன்கள் கொடுப்பது மட்டுமின்றி அவற்றுக்கான நல் வழி பிறக்கவும் கடவுள்.., வழி செய்வார்கள்.
தினமும் நாம் நெற்றியில் குங்கம், சந்தனம், ரிபூதி. போன்ற ஏதாவது ஒரு சிறந்த திலகத்தை நம் நெற்றியில் வைக்க வேண்டும்.
அப்படியிட்டால்.., கடவுள் அருள் நம் மீது இருப்பதோடு தீ வினைகள் விலகி விடும் என்பது ஐதீக உண்மை.
அப்படி நாம் நெற்றியில் இடும் திலகத்தில் மஹாலக்ஷ்மியின் திலகத்தை நெற்றியில் இட்டால்.., இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்..
அப்படி பட்ட சிறந்த திலகத்தை நாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்றும், நெற்றியில் வைப்பத்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி இதில் படிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை கற்பூரம்
ஏலக்காய்..
செய்முறை :
இந்த திலகத்தை நாம் எல்லாம் நாட்களிலும் செய்து விட முடியாது.., அமாவாசை, பெளர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் மட்டுமே செய்ய முடியும்.
மேற்கண்ட நாட்களில் ஏதாவது ஒரு நாட்களில் அதாவது நீங்கள் எந்த நாளில் திலகத்தை தயாரிக்க விரும்புகிறீர்களோ., அந்த நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு..
பூஜை அறையில் அமர்ந்து.., விளக்கு ஏற்றி விட்டு.., அதன் பின் மற்றொரு அகல் விளக்கில் பச்சை கற்பூரம் ஏற்ற வேண்டும்.
கற்பூரம் எரிந்து கொண்டு இருக்கும் போது “ஓம் ஸ்ரீம்” எனும் மந்திரத்தை உச்சரித்து விட்டு…, எரிந்து கொண்டு இருக்கும் கற்பூரத்தில் ஏலக்காயை போட வேண்டும்.
“ஓம் ஸ்ரீம்” எனும் இந்த மந்திரத்தை 6 முறையாவது உச்சரிக்க வேண்டும்..
மற்றும்.. ஏலக்காய் சாம்பல் ஆகும் வரை அந்த அகல் விளக்கில் பச்சை கற்பூரத்தை போட்டு கொண்டே இருக்க வேண்டும். அனைத்து ஏலக்காயும் சாம்பல் ஆகும் வரை கற்பூரத்தை போட வேண்டும்.
பின் அந்த சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ளலாம்..,
அல்லது.., நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், அரகஜா நெய் போன்ற ஏதாவது ஒன்றில் கலந்து கூட நெற்றியில் திலகமாக வைக்கலாம்.
கிடைக்கும் பலன் :
* எதிர் வினைகள் விலகும்..,
* தீய சக்தியின் ஆச்சுருத்தல்கள் விலகும்..,
* கடன் தொல்லை தீரும்..,
* கணவன் மனைவி இடையேயான சண்டைகள் விலகும்..,
மற்றும் நீங்கள் நினைத்த செயல்கள் வெற்றி கொடுக்கும்..
இந்த திலகத்தை நெற்றியில் வைக்கும் போது “ஓம் ஸ்ரீம்” மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்..