8பேர் தான் செண்டம்மா..? எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பாஸ்..? முதல் இடம் எந்த மாவட்டம்..?
கடந்த மார்ச் 26ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.., அதில் 9லட்சத்து 8 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.., தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றதை தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி தேர்ச்சி சதவீதமானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தமிழில் 8 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஆனால் கணிதம் பாடப்பிரிவில் 20 ஆயிரத்து 691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆங்கிலத்தில் 91.15 சதவீதம், கணிதத்தில் 96.78 சதவீதம், அறிவியலில் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 9574 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எந்த பாடத்தில் எத்தனை சதவிகிதம் :
9 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் 30,646 மாணவர்கள் மட்டுமே எதாவது ஒரு பாடப்பிரிவில் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும்.., தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அதாவது பாடவாரியாக பார்க்கும் பொழுது தமிழ் பாட பிரிவில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 415 மாணவர்களும், கணிதத்தில் 20,691 மாணவர்களும், அறிவியலில் பாடப்பிரிவில் 5104 மாணவர்களும், சமூக அறிவியலில் 4428 மாணவர்களும் 100% மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
எப்பொழுதும் தமிழில் 100க்கு 100 வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு தமிழில் வெறும் 8 மாணவர்கள் மட்டுமே 100% மதிப்பெண்கள் பெற்று இருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும்.
அதே நேரத்தில் கணித பாடப்பிரிவில் இந்த ஆண்டு 20,691 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை மொத்தம் 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளிகள் எழுதியிருக்கும் நிலையில் அவர்களில் 12,491 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
தேர்ச்சி சதவீதம் 92.45 சதவீதமாக இருக்கிறது. அதே போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 260 சிறைவாசிகள் எழுதிய நிலையில் அவர்களின் 228 பேர் தேர்ச்சி பெற்று சதவீதம் 87.69% ஆக உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..