ராகி கஞ்சி..கூழ் எப்படி செய்வது..?
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1/4 கப்
தண்ணீர் – 3 கப் (1 கப் – 250 மிலி)
கெட்டியான தயிர்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய் – 2 எண்கள்
கொத்துமல்லி இலை
உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
ராகி மாவை நீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும்.
காலையில் ஊறவைத்த ராகி மாவின் மேல் இருக்கும் நுரையை நீக்கி விட வேண்டும். பின் அதனை கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் ராகி கலவையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை நன்றாக ஆறவைக்க வேண்டும்.
பின் ராகி கலவையில் கெட்டியான தயிர், உப்பு, பொரியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் ராகி கஞ்சி தயார். இதனை மண்பானையில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.
