நாவில் எச்சில் ஊற வைக்கும் இறால் ஊறுகாய்… செய்வது எப்படி..?
நாம் ஊறுகாயில் எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய், நெல்லிக்காய் என எத்தனையோ சாப்பிட்டு இருப்போம்.
ஆனால் அசைவத்தில் ஊறுகாய் சாப்பிட்டு இருக்க மாட்டோம், அப்படி அசைவத்தில் ஒன்றான இறால் ஊறுகாய் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். அசைவப் பிரியர்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
இறால் – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 4ஸ்பூன்
வெந்தயப்பொடி – 1ஸ்பூன்
பூண்டு – 10 பல்லு (நறுக்கியது)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
வினிகர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஊறுகாய் செய்வதற்கு தேவையான இறாலை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தது இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிளின் செய்து வைத்துள்ள இறாலில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு இறாலில் நன்றாக கலந்து விட வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த இறாலை போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.
அதே வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பிறகு மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கலந்து அத்துடன் நாம் ஏற்கனவே கலந்து வைத்துள்ள இறாலை சேர்க்க வேண்டும்.
சரியாக 5 நிமிடம் இறாலை வேக விட்டு அரை கப் வினிகர் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான இறால் ஊறுகாய் ரெடி.
பிறகு சூடு ஆறியதும் ஊறுகாயை கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி விடலாம். தேவையான போது எடுத்து சாப்பிடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.