பிறந்த குழந்தையை எப்படி பார்த்துகனும்னு தெரியுமா..? முதல் முறை பெற்றோர்களுக்கு..!
முதல் முறையாக குழந்தை பிறந்திருக்கும் பெற்றோர்களுக்கு குழந்தை பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
குழந்தையின் மழலை சிரிப்பில் சிக்கி இருப்பார்கள்.
அவ்வளவு சந்தோசத்தை தந்திருக்கும் குழந்தையை நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்த சில மாதங்கள் பெற்றோர்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
1. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது
குழந்தைக்கு தாய்ப்பால் குடுப்பது ரொம்ப நல்லது, அவர்களின் உடலுக்கு ஆரம்பக் காலக்கட்டத்தில் நீங்கள் குடுக்கும் எதிர்ப்பு சக்தி நிறைந்த பானம் எனக் கூறலாம்.
தாய்ப்பாலில் சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால், மருத்துவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மணிக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துகிறார்கள்.
2. குழந்தையை சரியான வழியில் வைத்திருத்தல்
பிஞ்சு குழந்தையை தூக்கும் போது மிகவும் கவனமாக தூக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உடல் மிகவும் மென்மையாக இருக்கும்.
குழந்தையை தூக்கும் போது நீங்கள் உங்கள் தோளில் சாய்த்து, உங்களின் ஒரு கையை குழந்தையின் கழுத்து மற்றும் வைக்க வேண்டும்.
3. உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
குழந்தைக்கு பேசத் தெரியாது, அதுக்கு அழுகை மட்டுமே தெரியும். எனவே குழந்தை அழுவது பசி, தூக்கம், எறும்பு கடித்தல், வயிற்று வலி என எதுவாக வேணா இருக்கலாம். அதனை கண்டறிந்து நீங்கள் குழந்தை அழுகையை நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து குழந்தை அழுகிறது என்றால் உடனே அருகில் உள்ள நல்ல குழந்தை மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும்.
4. மசாஜ் செய்யும் வழக்கம்
குழந்தைக்கும் மசாஜ் மிகவும் முக்கியமானது. தினமும் குழந்தைக்கு ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு உடல் முழுக்க மசாஜ் செய்யும் பழக்கத்தை பின்பற்றுங்கள்.
5. சரியான ஆடைகளை உடுத்துங்கள்
உங்கள் குழந்தைக்கு ஆடம்பரமாக ஆடைகளை வாங்கி உடுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை கைவிட்டுவிடுங்கள். பிறந்த குழந்தை உடலுக்கு தேவைப்படுவது பருத்தி ஆடைகள் மட்டுமே.
6. உங்கள் குழந்தையுடன் பேசவும்
குழந்தையிடம் நீங்கள் தினமும் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். பிறந்த குழந்தைக்கு நீங்கள் பேசுவது புரியாது என்றாலும் அவர்கள் நன்றாக கவனிப்பார்கள், சிரிப்பார்கள்.
7. சரியான குழந்தை பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்யவும்
சந்தையில் நிறைய குழந்தை பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், அவைகளில் பெரும்பாலானவை செயற்கை இரசாயனம் கலந்தவையே, எனவே நீங்கள் பொருட்களை வாங்கும் முன் குழந்தை மருத்துவரை அணுகி, இரசாயனம் கலக்காத பராமரிப்பு பொருட்களை வாங்கி வந்து பயன்படுத்த வேண்டும்.
8. உங்கள் குழந்தையை கழுவுதல் மற்றும் குளித்தல்
பிறந்த குழந்தையை தினமும் குளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் வெது வெதுப்பான நீரை கொண்டு சுத்தமான காட்டன் துணியால் துடைத்தெடுக்க வேண்டும்.
தொப்புள் புண் ஆரியதும் குழந்தையை குளிக்க வைக்கலாம்.
9. டயப்பர்களை மாற்றுதல்
குழந்தை அடிக்கடி சிறுநீர் கழித்துவிடும். எனவே நீங்கள் அடிக்கடி செக் செய்து அதை மாற்ற வேண்டும். ஈரமாக நீண்ட விட்டுவிடக் கூடாது.
10. தூக்கம்
பிறந்த குழந்தைக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. நல்ல நீண்ட உறக்கம் இருந்தால் தான் அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள்.
குழந்தையை தூங்க வைக்கும் போது அவர்களுக்கு தாலாட்டு மற்றும் கதை சொல்லி உறங்க வைத்தால் நன்றாக தூங்குவார்கள்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
