யூஸ்புல்லாக இருக்கும் சமையல் டிப்ஸ்… வாங்க தெறிந்து வச்சிக்கோங்க…
அடுப்பங்கறையில் சமைக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில டிப்ஸ் பார்க்கலாம் வாங்க..
சமையல் டிப்ஸ்:
-
சிறிது உப்பை, கோதுமை மாவு உள்ள டப்பாவில் போட்டுவத்தால் மாவில் வண்டு பிடிக்காது.
-
சிறிது உப்பு மற்றும் வினிகர் கொஞ்சம் எடுத்து காப்பர் பாத்திரத்தில் பூசி துணியால் துடைத்தால் பாத்திரம் பளிச்சென இருக்கும்.
-
இட்லி மாவு புளிக்காமல இருக்க, மாவில் வெற்றிலையை காம்பு நீக்கி போட்டு வைக்க வேண்டும்.
-
மிக்ஸி பிளேடை சுத்தம் செய்ய கழட்ட முடியாமல் இருந்தால், ஜாரில் சிறிது வெந்நீர் ஊற்றிவைத்து சிறிது நேரம் சென்று கழட்டினால் பிளேடை ஈசியாக கழட்டலாம்.
-
சப்பாத்தி சீக்கிரம் காய்ந்து போகிறதே என்று கவலை வேண்டாம், சப்பாத்தி காயாமல் இருக்க சில்வர் பாயில் பேப்பர் கொண்டு சுற்றிவத்தால் காயாமல் இருக்கும்.
-
ரசம் ருசியாக வைக்க, அத்துடன் சிறிது தேங்காய் தண்ணீர் சேர்த்து வைத்தால் நல்லா இருக்கும்.
-
கறிவேப்பிலை காயாமல் இருக்க அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க வேண்டும்.
-
வெங்காயத்தை வறுத்து சாம்பார் வைத்து இறக்கும் சமயத்தில் சாம்பாரில் போட்டால், சாம்பார் ருசியாக இருக்கும்.
-
மொறுமொறுப்பான தோசை சுட மாவில் சிறிது சர்க்கரை சேர்க்க வேண்டும்.
-
பூரி சுடும்போது மாவு போட்டு தேய்க்காமல் எண்ணெய் போட்டு தேய்த்து பூரி சுட்டால் எண்ணெய் கருகாமல் இருக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
