ஹெல்தியான கேரட் பீட்ரூட் சூப்…!
தேவையான பொருட்கள்:
கேரட் – 4
பீட்ரூட் – 1
உப்பில்லா வெண்ணெய் – 6 துண்டுகள்
பட்டை
பிரியாணி இலை – 2
வெங்காயம் – 2
பூண்டு – 8 பற்கள்
உப்பு – தேவையானது
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்
பிரட் துண்டுகள்
பேசில் இலை
செய்முறை:
ஒரு வாணலில் வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை,பட்டை ஆகியவற்றை சேர்த்து நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
பின் அதனை ஆற விட்டு விழுதாக அரைக்க வேண்டும்.
ஒரு வாணலில் ஊற்றி குறைந்த தீயில் பேசில் இலை கலந்து கொதிக்க விடவும்.
ஆலிவ் எண்ணெயில் நறுக்கிய பிரட் துண்டுகளை பொன்னிறமாக வறுக்கவும்.
கடைசியில் சூப்பில் பிரட் துண்டுகளை வைத்து பரிமாறலாம்.
