“தாத்தா வராரு.. சிதறவிட போறாரு..” இந்தியன் 2..! தமிழக அரசு முடிவு..?
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள “இந்தியன் 2 (Indian 2) திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ஒரு மெகா ஹிட் ஒரு திரைப்படம். அதில் கமல்ஹாசன் நடித்த சேனாபதி கதாபாத்திரம் பெரிதும் வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அப்போது சில சண்டை காட்சிகள் நடத்தப்பட்ட போது பிரபல ஸ்டுடியோவில் ஸ்டேண்ட் மாஸ்டர்கள் மீது லைட் விழுந்து உயிர் இழந்தனர்.. அதனால் அப்போது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
அதன் பின் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, நாளை திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆனால் இதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது.. அதாவது இந்தியன் படத்தின் முதலாவது பாகத்தில் வர்மக்கலை குறித்த ஒரு காட்சி இருக்கும்.., அதனை மதுரை வர்மகலை ஆசான் ராஜேந்திரன் என்பவர் கற்றுக்கொடுத்துள்ளார்.. அதற்காக அவருடைய பெயரும் இந்தியன்-1 படத்தில் இடம்பெற்றிருந்தது.
ஆனால் இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை குறித்த ஆலோசனை எதுவும் செய்யவில்லை, எனவே இந்த படத்தை திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் வெளியிட தடைவிதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அதன் வழக்கு இன்று தொடரப்பட்டது.., படக்குழுவினர் கொடுத்த சான்றிதழ் மற்றும் ஆதாரங்கள் அவர்களுக்கு சாதகமானதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது..
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு நாளை ஒரு நாள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. மேலும் வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் காட்சி நள்ளிரவு 2 மணிக்குள் முடியும் என தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ