கறிவேப்பிலை துவையல் எப்படி செய்வது..?
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை 2 கப்
உளுத்தம் பருப்பு 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
புளி நெல்லிக்காய் அளவு
எண்ணெய் தேவையானது
கடுகு அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனியே வைக்க வேண்டும்.
பின் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
வதக்கியவற்றை ஆற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, இஞ்சி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் கமகமணு கறிவேப்பிலை துவையல் தயார்.
இதனை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
அது இல்லாமல் சாம்பார் போன்றவற்றிற்கும் தொட்டு சாப்பிட துவையாக இருக்கும்.