வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு..!! 2000 கோடி நிவாரண நிதி கேட்ட கேரளா அரசு..!! ஒன்றிய அரசின் முடிவு..?
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் இருந்து படியே பிரதமர் மோடி பார்வையிட்டார்.
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தது..
வீடுகள், கட்டடங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவை அங்கு இருந்தன என்பதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் இருந்து கேரளா மீண்டு வருவதற்காக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டின. பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவை பார்வையிட நேற்று பிரதமர் நரேந்திர மோடி கேரளா வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி வயநாடு பகுதியில் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என அப்போது அவர் உறுதி அளித்தார். உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார். கடந்த வாரமே மக்களவை எதிர்க்கட்சி ராகுல் காந்தி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..