முதுநிலை நீட் தேர்வு தொடக்கம்..!! விதிக்கப்பட்ட ரூல்ஸ்..!! மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள்..!!
மருத்துவ படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. இதற்காக 2 லட்சதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமின்றி 25 ஆயிரதிற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுத போவதாக தகவல் கிடைத்துள்ளது. நீட் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது..
இந்த நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். ஆனால் மறுபக்கம் இந்த நீட் தேர்வினால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாலும் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு களைந்து போவதாகவும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுருத்தி வருகிறது.
இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்தவுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்த நிலையில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்வு தேதி மாற்றியமைக்கப்படும் என அறிவித்திருந்தது..
அதனை தொடர்ந்து தேர்வானது இன்று காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக நடத்தப்படும் என அறிக்கை வெளியானது.. இதில் பல லட்சம் மாணவர்களுக்கு நீண்ட தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்படித்து குறிபிடத்தக்கது.. அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்து உள்ளது. எனவே அது சம்மந்தமாக மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஆனால் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தற்போது நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது. இரண்டாவது ஷிப்ட் தேர்வு பிற்பகல் 3.30 முதல் 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணிணி வழி தேர்வாக இந்த தேர்வு நடைபெறுகிறது. ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய ஐடிகார்டு, என்.எம்.சி பதிவு நகல் ஆகியவற்றை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..