இட்லி தோசை போர் அடிச்சா இத பண்ணுங்க…! காலை உணவு..!
தேவையான பொருட்கள்:
முட்டை கலவை:
முட்டை
வேகவைத்த ஸ்வீட் சோளம்
பச்சை குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாய்
வெங்காயத்தாள்
உப்பு
மிளகுத்தூள்
சீஸி முட்டை டோஸ்ட் செய்ய:
பிரட் துண்டுகள்
முட்டை கலவை
வெண்ணெய்
சீஸ் துண்டு
செய்முறை:
முட்டை கலவைக்கு செய்ய ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து கொண்டு அதில் குடைமிளகாய்கள்,வெங்காயத்தாள்,உப்பு,மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பிரட்டை நான்கு முனைகளின் உள்பக்கமாக ஓரங்களை வெட்டி நடு பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனில் வென்ணெய் விட்டு பிரட் துண்டின் வெளிப்புற சதுர வடிவ ஓரத்தை வைக்கவும் அதில் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் சீஸ் துண்டை வைக்கவும்.
அதன் மேல் பிரட்டின் உட்புற பகுதியை வைத்து வெண்ணெய் தடவவும்.
திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
இப்போது சீஸ் முட்டை டோஸ்ட் தயார்.