வாழைத்தண்டு ஸ்நாக்ஸ்..!
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு ஒன்று
கோதுமை மாவு இரண்டு கப்
அரிசி மாவு ஒரு ஸ்பூன்
கடலைமாவு ஒரு ஸ்பூன்
பொட்டுகடலை மாவு ஒரு ஸ்பூன்
வெள்ளை எள் கால் ஸ்பூன்
ஓமம் கால் ஸ்பூன்
வெண்ணெய் ஒரு துண்டு
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
வாழை தண்டை சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வடிகட்டியில் அரைத்தவற்றை சேர்த்து சாறு தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் இரண்டு கப் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலைமாவு, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு, எடுத்துக் கொண்டு அனைத்தையும் கலந்துக் கொள்ளவும்.
பின் அதில் ஓமம் கால் ஸ்பூன், எள்ளு கால் ஸ்பூன், வெண்ணெய் ஒரு துண்டு, பெருங்காயத்தூள் கால் ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு சாறு இதில் கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்துக் உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
சப்பாத்தி கல்லில் உருண்டைகளை வைத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
பின் கத்தி கொண்டு உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டுக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டிய துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் டேஸ்டியான வாழைத்தண்டு ஸ்நாக்ஸ் தயார்.