ருசியான சிக்கன் ஊறுகாய் செய்யலாமா…!
மசாலா தூள் அரைக்க:
பட்டை 2 துண்டு
ஏலக்காய் 5
கிராம்பு சிறிது
தனியா 4 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் அரை கிலோ
அரைத்த மசாலா தூள்
மஞ்சள்தூள்
உப்பு
இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
நல்லெண்ணெய் 1 கப்
மிளகாய்த்தூள் அரை கப்
எலுமிச்சை சாறு 1 பழம்
ஒரு வாணலை அடுப்பில் வைத்து பட்டை,ஏலக்காய்,கிராம்பு,தனியா,சீரகம்,கடுகு,வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு அதனை நன்றாக ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சிக்கனை போட்டு தண்ணீர் வற்றி வரும்வரை கலந்து விடவும்.
நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அதில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து அத்துடன் அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்து குறைந்த தீயில் சிறிது நேரம் வேக வைக்கவும்.
பின் அடுப்பை அணைத்து எலுமிச்சை பழச்சாறு கலந்து விடவும்.
அவ்வளவுதான் நாக்கிற்கு சுறுக்குனு இருக்கக்கூடிய சிக்கன் ஊறுகாய் தயார்.