ஈரோடு தொகுதியில் மக்களின் ஆதரவு இவருக்கு மட்டுமே..!!
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதில் நம் மதிமுகம் தினமும் ஒரு சர்வே எடுத்து வருகிறது. நேற்று மாலை நாம் எடுத்த சர்வே ஈரோடு தொகுதி.
திமுக வேட்பளார் கே.இ.பிரகாஷ் :
ஈரோடு மக்களவை தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள திமுக வேட்பளார் கே.இ.பிரகாஷ் இவர் திமுகவில் மாநில இளைஞர் அணி செயலாளராகவும்.., மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இருந்தவர். தற்போது கெமிக்கல் வியாபாரம் செய்து வரும் இவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், தற்போது இவரின் சொத்து மதிப்புகள் குறைந்த அளவில் இருப்பதால் இவருக்கு ஈரோடு தொகுதியில் மக்களின் செல்வாக்கு அதிகம்.
விவசாயிகளுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் இவர் வந்து உதவுவார் எனவே ஈரோடு தொகுதியில் மக்களின் ஆதரவு கே.இ.பிரகாஷ் அதிகம் என்பதால் இந்த தேர்தலில் இவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவரை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தது மற்ற வேட்பாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் மற்ற வேட்பளார்கள் நீண்ட காலமாக அதிமுகவிற்காக உழைத்தும் சீட் கொடுக்காத சமயத்தில்.., இவருக்கு பணம் பலம் அதிகம் என்பதால் சீட் கிடைத்து இருப்பதாக மற்ற கட்சி நிருவாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றல் அசோக்குமார் அவரின் அத்தையான டாக்டர் சிஆர் சரஸ்வதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். வெறும் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ஆற்றல் அசோக்குமார் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் உடனே அவருக்கு லோக்சபா வேட்பளாக சீட் கிடைத்திருப்பது சந்தேகத்திற்கு குரிய ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் ஆற்றல் அசோக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து வெளியிட்டுள்ளார். ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு 583 கோடி என்று அறிவித்துள்ளார்.
வங்கி கணக்கில் சுமார் 7 கோடியும், அசையும் சொத்துகள் 526.53 கோடியும், அசையாத சொத்துகள் 56.95 கோடியும் என தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் நகை வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்களின் சொத்து மதிப்பு 47 கோடி என தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பாளராக இவர் களம் இறக்கப்பட்டிருப்பதால் மக்களின் ஆதரவு கிடைக்கும் என தேர்தலுக்கு பின்னரே தெரியும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமார் அவர்கள் இந்த தொகுதியில் முதல் முதலாக போட்டியிருடக்கிறார்., பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இந்த முறை பாஜகவுடன் கூட்டணியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் அவரின் சொத்து மதிப்பு வேட்புமனு தாக்கலின் போது வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது அசையும் சொத்துக்கள் 225 கோடியும், அசையா சொத்து 102 கோடியும் தங்க நகைகள் 260 சவரனும் என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்மேகம் அந்தகால பட்டதாரியாகவும் விவசாயியாகவும் விளங்குகிறார்.., விவசாயிகளுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பது மட்டுமின்றி இளைஞர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தருகிறார். தற்போது இவருக்கு மக்களின் ஆதரவு இருப்பது குறிப்பிட தக்கது.
நம் மதிமுகம் சர்வேயில் ஈரோடு லோக்சபா தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்று பார்த்ததில் ( Madhimugam Prime YouTube ) 100க்கு 58% சதவிகித வாக்கு திமுக எம்பி கே.இ.பிரகாஷ் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..