நோய் எதிர்ப்பு சக்கியை அதிகரிக்க இஞ்சி சர்பத்…!
தேவையான பொருட்கள்:
இஞ்சி சிரப் செய்வதற்கு
இஞ்சி – 300 கிராம்
தண்ணீர் – 5 கப்
சர்க்கரை – 2 கப்
இஞ்சி சர்பத் செய்வதற்கு
இஞ்சி சிரப்
எலுமிச்சை சாறு – 1 பழம்
எலுமிச்சை பழத்துண்டுகள்
புதினா இலை
ஐஸ் கட்டிகள்
சோடா
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இஞ்சி போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
அதனை வடிகட்டி பின் ஒரு பாத்திரத்தில் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்றாக கெட்டியாக மாறியதும் ஆறவிட்டு ஃபிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இஞ்சி சர்பத் தயாரிக்க இஞ்சி சிரப்பை சிறிது ஊற்றி எலுமிச்சை பழச்சாறு சேர்க்க வேண்டும்.
பின் அதில் புதினா இலை,எலுமிச்சை துண்டுகள்,ஐஸ்கட்டி மற்றும் சோடா ஊற்றி கலக்கவும்.
அவ்ளோதான் இஞ்சி சர்பத் தயார்.