எதிலும் பொறுமையும் சிந்தனையும் வேண்டும்..! குட்டிஸ்டோரி- 58
விவசாயி ஒருவர் அவரோட கொட்டாயில இருந்த கடிகாரம் தொலைஞ்சு போகுது அவருக்கு அந்த கடிகாரம்னா ரொம்ப சென்டிமென்ட்டாம் அது தொலைஞ்சதுனால ரொம்ப கவலைபடுவாறு.. கொட்டையில இருந்து வெளியே வந்து அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் என்னோட வாட்ச் தொலைந்து விட்டது யார் நீங்க கண்டுபிடிச்சு கொடுக்குறீங்களோ. உங்களுக்கு நான் ஒரு கிப்ட் கொடுக்குறேன் அப்படின்னு சொல்லுவாரு அந்த சிறுவர்கள் ரொம்ப ஆர்வமா தேட ஆரம்பிக்கிறாங்க.. ஆனா ரொம்ப நேரம் தேடியும் அந்த வாட்ச் கிடைக்கல
அப்போ ஒரு சின்ன பையன் வரான் ஐயா எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறீர்களா அப்படின்னு கேட்பான். அந்த விவசாயும் ஓகே சொல்றாரு. அந்த பையனும் கொட்டாய் குள்ள போயிட்டு ரொம்ப நேரம் கழிச்சு வாட்ச் எடுத்துட்டு வரான்..
அத பாத்து அந்த விவசாயி ரொம்ப சந்தோஷமா இருக்காரு. அப்புறம் அந்த பையன் கிட்ட கேக்குறாரு உனக்கு எப்படி இந்த வாட்ச் கிடைத்தது. அதுக்கு அந்த பையன் ஐயா நான் எதுவுமே பண்ணல நான் கொட்டாய்க்குள்ள போயிட்டு ஒரு இடத்துல உட்கார்ந்துகிட்டேன் அங்கு வர சத்தத்தை எல்லாம் நான் கவனித்துக்கொண்டு இருந்தேன் அந்த கடிகாரத்தோட சத்தம் டிக் டிக் னு கேட்டுச்சு சத்தத்தை நோக்கி நான் போனேன் கடிகாரம் எனக்கு கிடைச்சது. சொல்லுறான்..
இதுல இருந்து நமக்கு தெரிஞ்சிக்க வேண்டியது என்னனா..? ஒரு விஷயம் நமக்கு நடந்தாலோ காணாம போயிடுச்சு சூழ்நிலை ரொம்ப பரபரப்பா இருக்கிறது. விட்டுட்டு அமைதியா தேடுனா தொலைச்ச பொருளோ சரி நம்ம தொலைச்ச விஷயத்தை தொலைச்சது எதுவா இருந்தாலும் சரி நம்ம கைக்கு வந்து சேரும்..