அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை பாஸ்…! இணையத்தில் கலக்கும் கோலிவுட் அவெஞ்சர்ஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் மற்ற மாநில சினிமாவின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். ஆனால், கோலிவுட் நடிகர்களின் கூட்டணியில் படங்கள் வருவது ரொம்பவே எட்டாக் கனியாகவே உள்ளது. இந்நிலையில், அந்த கனவை ரசிகர்கள் எடிட் மூலம் நிறைவேற்றியுள்ள வீடியோ ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, பகத் ஃபாசில் எல்லாம் ஒரே படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமான அந்த எடிட்டை பார்த்தாலே அனைத்து ஃபேன்ஸ் ஆர்மியும் சண்டையை எல்லாம் மறந்து விட்டு ஒன்றாக சேர்ந்து விடுவார்களோ என்கிற எண்ணங்களும் தோன்றுகிறது.
ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை பாஸ் என்று ரசிகர்கள் புலம்பியபடி கமெண்ட்டுகளை போட்டு வருவதையும் பார்க்கத்தான் முடிகிறது.
தமிழ் சினிமாவில் இன்னமும் 1000 கோடி வசூலை தொட முடியவில்லையே என்கிற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி சினிமாக்கள் மட்டுமே 1000 கோடி வசூல் படங்களை அசால்ட்டாக கொடுத்து கெத்துக் காட்டி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என சிறந்த நடிகர்கள் இருந்தும் இன்னமும் அந்த இலக்கை கோலிவுட்டால் அடைய முடியவில்லை.
அவெஞ்சர்ஸ் படத்தில் அவர்கள் எல்லாம் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்கிற ஏஐ எடிட்டை ரசிகர் ஒருவர் செய்ய அது வைரலாகி வருகிறது. விஜய் அயன்மேனாகவும், ரஜினிகாந்த் நிக் ஃபியூரியாகவும், தோர் கதாபாத்திரத்தில் அஜித்தும், ஹல்க்காக விக்ரம், கேப்டன் அமெரிக்காவாக சூர்யா மற்றும் லோகியாக பகத் ஃபாசிலும் நடித்தால் படம் வேறலெவலில் வசூலை குவிக்கும் என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
இதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை :
விஜய் சினிமாவை விட்டே விலகப் போகிறார். அஜித் குமார் ரேஸுக்கு செல்லப் போகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் மற்ற மொழி நடிகர்களுடன் நடித்து வருகின்றனர். கோலிவுட் நடிகர்களை ஒன்று திரட்டி ஒரு படத்தை இவர்கள் ஒருபோதும் எடுக்க வாய்ப்பே இல்லை என்றே ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமானு காத்திருந்து பார்க்கலாம்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..