பழனி அக்னி நட்சத்திரவிழா தொடக்கம்..!
வருடந்தோறும் பழனியில் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் ஏழு நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும்.
விழா தொடக்கமாக நேற்று காலை மலைக்கோயில் மற்றும் பெரிய நாயகி அம்மன் கோவிலில் சீதக்கும்பம் வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பூ அலங்காரமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
இந்த திருவிழா மே 21ம் தேதி வரை நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த திருவிழாவை காண மக்கள் ஊரெங்கும் நாடெங்கும் இருந்து வழிபட்டு செல்வார்கள். இந்த விழா கிரிவலம் போலவும் காட்சி அளிக்கும்.
பக்தர்கள் கிரிவலம் செல்லும் பொழுது சுற்றி எங்கிலும் மூலிகை காற்று வீசும் அதை சுவாசிக்கும் பொழுது தீராத நோய்களும் குணமாகும் என்பது அவர்களின் நம்பிக்கை.
மேலும் நேற்று காலை முதல் கடம்ப மலர்களை பெண்கள் தலையில் சூடியும், ஆண்கள் கையில் ஏந்தியும் கிரிவலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த கிரிவலம் மாலையும் சிலர் செல்வார்கள் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி